Lyrics
கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே!
கர்த்தன் இயேசு பார் உனக்காய் கஷ்டங்கள் சகித்தாரே! - 2
விலையேறப் பெற்ற திருரத்தமே!
அவர் விலாவினின்று பாயுதே!
விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே! - 2
1. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ இவ்வன்புக் கிணையாகுமோ!
அன்னையிலும் அன்பு வைத்தே தம் ஜீவனை ஈந்தாரே! - 2
விலையேறப் பெற்ற திருரத்தமே!...
2.சிந்தையிலே பாரங்களும் நிந்தைகள் ஏற்றவராய்,
தொங்குகின்றார் பாதகன் போல் மங்கா வாழ்வளிக்கவே! - 2
விலையேறப் பெற்ற திருரத்தமே!...
3.எந்தனுக்காய் கல்வாரியில் இந்தப் பாடுகள் பட்டீர்!
தந்தையே உம் அன்பினையே சிந்தித்தே சேவை செய்வேன்! - 2
விலையேறப் பெற்ற திருரத்தமே!...