Lyrics
புதிதாக்குகிறேன் நான் புதிதாக்குகிறேன்
சகலத்தையும் நான் புதிதாக்குகிறேன்
முந்தினவை ஒழிந்தது துயரங்கள் மறைந்தது
புதுவழி திறந்தது நன்மைகள் பிறந்தது
மகிழ்ந்திடு மகனே மகிழ்ந்திடு
துதித்திடு மகனே துதித்திடு
மாற்றத்தை நீயும் கண்டிடுவாய்
தேசத்தை நீயும் சுதந்தரிப்பாய்
1. புதிய இதயம் உனக்குத் தந்து
புதிய சிந்தையை அருளிடுவேன்
பாவத்தின் வல்லமை அழிந்தது
பரிசுத்தம் உன்னில் பிறந்தது - மகிழ்ந்திடு மகனே
2. புதிய ஆவியால் நிரப்பிடுவேன்
புதிய வல்லமை தந்திடுவேன்
சாத்தானின் ஆதிக்கம் அழிந்தது
சுபிட்சத்தின் நாட்கள் வந்தது - மகிழ்ந்திடு மகனே
3. தேசத்தில் எழுப்புதல் கண்டிடுவாய்
தேசத்தின் நன்மையை புசித்திடுவாய்
வருகையில் என்னை தரிசிப்பாய்
நித்திய காலமாய் மகிழ்ந்திருப்பாய்
- மகிழ்ந்திடு மகனே