என் மீட்பர் உயிரோடிருக்கையிலே | En Meetpar Uyirodirukayile

Category: Songs

Duration: 5m

Lyrics

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
எனக் கென்ன குறையுண்டு நீ சொல் மனமே

என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்
என்னோடிருக்கவே எழுத்திருந்தோர்
விண்ணுலகுயர்ந்தோர் உன்னதஞ்சிறந்தோர்
மித்திரனே சுகபத்திர மருளும்

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
எனக் கென்ன குறையுண்டு நீ சொல் மனமே

பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ..
பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர்
சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்
சஞ்சலமினியேன்? நெஞ்சமே, மகிழாய்.

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே

எனக் கென்ன குறையுண்டு நீ சொல் மனமே

ஆசிசெய்திடுவார் அருள்மிக அளிப்பார்
அம்பரத் தனிலெனக்காய் ஜெபிப்பார்
மோட்சமே மறைப்பார், முன்னமே நடப்பார்
மோட்ச வழி சத்யம் வாசல் உயிரெனும்.

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
எனக் கென்ன குறையுண்டு நீ சொல் மனமே

கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார்:
கடைசி மட்டுங் கைவிடாதிருப்பார்:
பவமனிப்பளிப்பார், பாக்கியங் கொடுப்பார்
பரம பதவியினுற் என்றனை எடுப்பார்.

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
எனக் கென்ன குறையுண்டு நீ சொல் மனமே

போனது போகட்டும், புவி வசை பேசட்டும்,
பொல்லான் அம்புகளெய்திடட்டும்,
ஆனது ஆகட்டும், அருள்மழை பெய்திடும்,
அன்புமிகும் பேரின்ப மெனக்கருள்.

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே

எனக் கென்ன குறையுண்டு நீ சொல் மனமே

Loading