Lyrics
கண்ணின் மணிப்போல காத்து வந்த தெய்வம்
கரம் பிடித்து என்னை நடத்தி வந்த தெய்வம்
இயேசு நீர்தானே நேசர் நீர்தானே
எத்தனை அன்பு என்மேல் உமக்கு
எத்தனை பாசம் என்மேல் உமக்கு
உம்மை விட்டு தூரம் போன துரோகி என்னையும்
கரம் பிடித்து இழுத்துக்கொண்ட அன்பு தெய்வமே
கைவிடப்பட்டு கலங்கின போது
கலங்காதே என்று சொல்லி
கண்ணீரைத் துடைத்த தெய்வமே
உம்மை போல அன்பு காட்டு இந்த உலகத்திலே
உறவு என்று சொல்லிக்கொள்ள ஒருவர் இல்லையே
என்னை மீட்டுக் கொள்ளவே
தன் ஜீவனை எனக்காய் தந்து
நித்திய ஜீவன் தந்த தெய்வமே